
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி விலக்கைச் சேர்ந்த குட்டி ஜெகன் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இன்று, அவர் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, தூத்துக்குடி நோக்கி வேகமாக வந்த ஒரு கார், ஜெகனின் வாகனத்தை மோதி தூக்கி வீசியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, அந்தக் காரை ஓட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.