
ராமநாதபுரத்தை சேர்ந்த ரம்ஜான் பீவி என்ற பெண்ணின் மகன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் 73 சவரன் தங்க நகைகளையும், அவற்றை வாங்கிய ரசீதுகளையும் முகமது பகாத், முகமது பஜரத் உள்ளிட்ட நால்வரிடம் கொடுத்தனுப்பியுள்ளார்.
இந்நிலையில், மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய பகாத் மற்றும் பஜரத், ரம்ஜான் பீவியை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது, நகைகளை திருப்பி தர முடியாது எனக் கூறி, அவரை அடித்து தள்ளியும் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் முகமது பகாத்தை கைது செய்தனர். முகமது பஜரத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.