தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்,பழனிச்சாமி,அண்ணாமலை,விஜயின் கருத்துகள்!!!

TN Budget 2025-26

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்

இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம், தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்,புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என 2025 நிதிநிலை அறிக்கை ”எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது. என்று நிதிநிலை அறிக்கை குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஒரு வெற்று காகிதம், அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்த போவதாக கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் இந்த அறிக்கை தாக்கல்.

மேலும் சென்னைக்கு அருகில் புதிய நகரம் போன்ற பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தியவை, இந்த உண்மையை மக்களும் அறிவார்கள். இந்த விளம்பரத்தை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள், 2026ம் ஆண்டு தேர்தலுக்கு காத்திருக்கிறார்கள், மக்களை ஏமாற்றும் திமுகாவிற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

விஜய் 

மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட், புதியதாக 9 மாவட்டங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் , பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தை பெண்கள் பெய்ரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம், ஆனால் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா? என்ற ஆழமான கேள்வியும் தோன்றுகிறது, காரணம் திமுகாவின் கடந்த கால ஆட்சியே அதற்கு சாட்சி. இந்த நிதி அறிக்கையில் எதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது.

விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் பாஜக அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ் நாட்டிலேயே இருந்து கொண்டு ,தமிழக மக்களின் நலன்களை மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது.இந்த ஏமாற்று வேலைகளுக்கு 2026ம் ஆண்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என தனது X   தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை

வழக்கம் போல ,கழகக் கண்மணிகளின் ஒரு நாள் கரகோஷத்துக்காக  வெற்று விளம்பர அறிவிப்புகள்  நிரம்பிய பட்ஜெட்டை வெளியிட்டு , தனது ஒரு நாள் கடமையை  நிறைவு செய்திருகிறார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ,தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. வெற்று விளம்பர அறிவிப்புகளும் அதற்கான   வீண் செலவுகளும் உயர்ந்துள்ளது. சாமனிய மக்களுக்கு  நான்காவது ஆண்டாக வழக்கம் போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக, என்று தனது  X தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.