
கன்னியாகுமரி மாவட்டம் தென்னந்தோப்பு பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், வன பகுதியில் விறகு எடுக்க சென்றிருந்தார். அப்போது அதே பகுதியில் கூலி தொழிலாளி சந்திரன் என்பவர், அந்தப் பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, பெண் அலறி சத்தமிட்டதையடுத்து அருகில் இருந்த கிராம மக்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் சந்திரன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த தென்னந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்திரனை வலைவீசி கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை தொடரும் நிலையில், இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.