அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

குட் பேட் அக்லி படத்தில் அனுமதியின்றி தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறி, படக்குழுவினருக்கு இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி, இத்திரைப்படத்தில் திரிஷா, பிரசன்னா,பிரபு, அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், திரையரங்கை நோக்கி ரசிகர்கள் படையெடுப்பு குறையவில்லை. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ‘மெக விருந்தாக’ இருப்பாதக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படம் வெளியாகி இதுவரை 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இளையராஜா இசையில் உருவான ‘ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ’ ஆகிய மூன்று பாடல்களும் அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தபட்டு உள்ளதாக இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், உடனடியாக அந்தப் பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். மற்றும் 7 நாட்களில் எழுத்துப்பூர்வமாக நிபந்தனை ஏற்ற மன்னிப்பு கூறவேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தான் இசையமைத்த பாடலின் தன்மையை தடுக்கும் விதமாக இந்தப் பாடல்கள் அமைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதே போல் கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திலும் தன்னுடைய பாடல் அனுமதியின்றி பயன்படுத்தபட்டு உள்ளாதக கூறி நஷ்ட ஈடு கோரியிருந்தார். இந்நிலையில் குட் பேட் அக்லி படக்குழுவினருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.