
குமரி மாவட்டம் தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 55). இவர் ஒரு மத போதகர். தன்னுடைய கிறிஸ்தவ சபையில் வாரத்தின் விடுமுறை நாட்களில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்காக வேதாகம வகுப்புகளை நடத்தி வந்தார்.
இந்த வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த 17 வயது சிறுவனிடம், வர்கீஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்ததுடன் தக்கலை காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மத போதகர் வர்கீஸை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் மூலச்சல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.