ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவியை பறித்தது ஏன்?

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவியை பறித்தது ஏன்

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தின் போது பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர்ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் தலைமை பிரதிநிதிகளிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பொற்கொடியை தமிழ்நாடு மாநில தலைவராக  நியமிக்க வேண்டும் என பொற்கொடியின் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை பிரதிநிதிகளிடம் மனுவை வழங்கினர். இந்த சம்பவம் கட்சியின் உள்ளே பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொற்கொடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அதில் பொற்கொடி இனி கட்சி பணிகளில் ஈடுபடமாட்டார் எனவும் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே கவனித்து கொள்வார். மேலும்  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் மட்டுமே பொற்கொடி இனிமேல் கவனத்தை செலுத்துவார் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பொற்கொடி ஆதரவாளர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.