கோவை காவல் நிலையத்தில் தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை!

"News headline about a reported suicide at a Coimbatore police station with police launching a detailed investigation"


கோவை மாநகர காவல் வரம்புக்குபட்ட பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் தற்கொலை சம்பவம் ஒன்று நேற்று நடந்ததுள்ளது

போலீஸ் தகவலின்படி, காவல் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள க்ரைம் பிரிவுக்குச் சேர்ந்த உதவி ஆய்வாளர் (SI) அலுவலக அறையில், ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த நபர் நேற்று (செவ்வாய்) இரவு 11 மணியளவில் காவல் நிலையத்துக்குள் நுழைந்ததாக சிசிடிவி பதிவுகள் கூறுகின்றன. ஆனால் அவர் யார்? என்ன காரணத்தால் காவல் நிலையத்திற்கு வந்தார்? என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தடயவியல் நிபுணர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பெரிய கடைவீதி போலீசார் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம், உயிரிழந்த நபரது அடையாளம் ஆகியவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் காவல் நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.