6 வருடங்களுக்கு பிறகு தோனி ஆட்ட நாயகன் விருது பெற்றது எப்படி?

6 வருடங்களுக்கு பிறகு தோனி ஆட்ட நாயகன் விருது பெற்றது எப்படி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் (2025) போட்டியின் 30 லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் 30 வது லீக் ஆட்டமான சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையிலான போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யுமாறு லக்னோவை அழைத்தது, லக்னோவின் தொடக்க ஆட்டகாரர்களாக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர்.

கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே அடிக்க முயன்று திருப்பாதியிடம் கேட்ச் கொடுத்து எய்டன் மார்கரம் வெளியேறினார்.

 இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பி வைத்து இருக்கும் நிக்கோல்ஸ் பூரன் (8 ரன்களில்) ஆட்டமிழந்து லக்னோ ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார், அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் கவனத்தோடு விளையாடி சரிவு பாதையில் இருந்து அணியை மீட்டினார், இருப்பினும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை சேர்த்தது, அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பந்த் 63 ரன்களை எடுத்திருந்தார்.

167 என்ற இலக்கை நோக்கி களமிரங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்தரா களமிறங்கினர். தனது தொடக்க ஆட்டத்திலேயே ஷேக் ரஷீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார்.

ஃபவர் பிளே முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் என நல்ல தொடக்கத்தை அளித்தாலும், ஆட்டத்தின் நடுப்பகுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து, ரன் சேர்க்கும் வேகத்தையும் குறைத்தது.  அடுத்ததாக ஜோடி சேர்ந்த தோனி மற்றும் துபே நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 167 என்ற இலக்கை 19 ஓவர் 3 பந்தில் எட்டிப் பிடித்தது, துபே 43(37), தோனி 26 (11) ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தனர்.

சிஎஸ்கேவின் இந்த வெற்றிக்கு வழிவகுத்தது, ஜடேஜ மற்றும் நூர் அகமது ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சும் , தொடக்கத்தில் சிறப்பான ஆட்டமும் மற்றும் இறுதியில் தோனியின் சிறப்பான கேமியோவும் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்ததுள்ளது.

பீல்டிங்கில் 2 ரன் அவுட், பேட்டிங்கில் 26(11) ரன்கள் என எடுத்த கேப்டன் தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ஆட்ட நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் ஏப் 20 தேதி அன்று மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பையில் எதிர்கொள்கிறது.