சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

"Medical college student from Chennai found dead in suspected suicide."


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா. திபி சத்திரம் பகுதியில் ஒரு அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில், திவ்யா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தங்கியிருந்த அறையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது மகள் கடந்த சில மாதங்களாக கடுமையான பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் திவ்யாவின் தந்தை கூறியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.