போலி நகைகளை அடகு வைத்து மோசடி முயற்சி – வயதான தம்பதி கைது!

"Elderly couple arrested for trying to commit fraud using fake gold jewelry."


சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கு சொந்தமான அடகுக் கடையில், சீனிவாசலு மற்றும் அவரது மனைவி அம்சலட்சுமி கடந்த ஆண்டில் 25 சவரன் போலி நகைகளை அடகு வைத்து 10 லட்ச ரூபாய் பெற்றுச் சென்றதாக புகார் எழுந்தது.

பின்னர் நகைகளை பரிசோதித்த போது அவை போலியானது என்பதும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், மீண்டும் அதே தம்பதியர் போலி நகைகளை அடகு வைக்க வந்தபோது, அதைக் கவனித்த கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். தகவலின் பேரில் ராயபுரம் போலீசார் விரைந்து சென்று, இருவரையும் கைது செய்தனர்.