சூட்கேஸில் காதலியை மறைத்து ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவன்! 

சூட்கேஸில் காதலியை மறைத்து ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவன்!

பஞ்சாப் மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது காதலியை சூட்கேசில் அடைத்து   போய்ஸ் ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்றபோது கையும் களவுமாக சிக்கி கொண்டுள்ளார்

அந்த மாணவன்   சூட்சமமான முறையில் காதலியை ஒரு பெரிய  சூட்கேஸுக்குள்  அடைத்து போய்ஸ் ஹாஸ்டலுக்கு  கூட்டிவந்துள்ளார்

அப்போது திடீரென அந்த பெண் சத்தம் எழுப்பியதால் மாணவன் போட்ட திட்டம் பயணிக்காமல் போயுள்ளது. சத்தம் கேட்டதும் ஹாஸ்டலில் பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டிகள் மாணவன் மீது  சந்தேகமடைந்த  விசாரித்துள்ளனர் 

அப்போது அந்த மாணவன் பதட்டத்துடன் பதிலலிக்க முடியாமல் தடுமாறியதால் , சூட்கேஸை திறந்தபோது அதனுள் இருந்து ஒரு பெண் வெளியே வர சம்பவ இடத்தில் இருந்த  அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் 

அங்கிருந்த சிலர் இந்தக் காட்சிகளை தங்கள் மொபைலில் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்ததையடுத்து அந்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.