
இன்றைய தங்கத்தின் விலை 70 ஆயிரத்தை கடந்து புதிய வரலாற்று விலையை பதிவு செய்துள்ளது
கடந்த 3ம் தேதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை மறுநாளில் இருந்து பாரிய சரிவை சந்தித்தது
அதன்படி, கடந்த 4-ஆம் தேதியில் இருந்து 8-ந் தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் அதிரடியாக குறைந்தது
இவ்வாறு குறைந்து வந்த தங்க விலை திடீரென நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒரே நாளில் நேற்று கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 745-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்திய வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை 70 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
12 ம் தேதியான இன்று தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,770-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
இதன் மூலம் 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,360 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது