
வழக்கரிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் வழக்கரிஞர் கைது செய்த உத்தரவுகள் அனைத்தும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக பா.ஜ.க.வின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருந்த அலெக்ஸிஸ் சுதாகர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக அலெக்ஸிஸ் சுதாகர் ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்
அதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். விசாரணையில், “மனுதாரரிடம் கைதுக்கான முறையான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்படாதது, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது,” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் அலெக்ஸிஸ் சுதாகர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த அனைத்து உத்தரவும் செல்லாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது