நெல்லைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்த தமிழர் விடுதலைக்களம் தலைவர் ப.ராஜ்குமார்

"Image showing Tamilar Viduthalai Katchi leader P. Rajkumar meeting AIADMK leader Edappadi Palaniswami in Nellai."

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களை, தமிழர் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் ப.ராஜ்குமார் இன்று நெல்லையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து, பொன்னாடை போர்த்தி நூல் பரிசளித்து வரவேற்றார்.

‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற நோக்கத்துடன் , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் அடுத்த இரண்டு நாட்களுக்கு திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கேக்கவுள்ளார்

இந்த நிலையில், இன்று காலை திருநெல்வேலிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், தனியார் விடுதியில் தங்கியிருந்து பிரசார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்

இதன் போது தமிழர் விடுதலைக் களம் கட்சியின் தலைவர் திரு ப.ராஜ்குமார், அவரை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து, புத்தகமொன்றையும் பரிசாக வழங்கியதோடு இருவரும் சில நிமிடங்கள் சகஜமாக உரையாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.