லாரியை ஓவர் டேக் செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்… பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!

"Image depicting a tragic road accident involving a lorry; a Plus 2 student lost their life while attempting to overtake."


திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பரணி (வயது 17), பிளஸ் 2 மாணவராக படித்து வந்தார். நேற்று நண்பர் ஹேம்நாத்துடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தார்.

அப்போது அவர்கள் முன்னால் சென்ற டாரஸ் லாரியை ஓவர் டேக் செய்ய முயன்றனர். இந்த நேரத்தில் பரணி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் சைடு மிரர், லாரியின் பக்கத்தில் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய பரணி கீழே விழுந்தார்.

அவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து, லாரியின் பின்சக்கரம் அவர் மீது ஏறியதால் பரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த நண்பர் ஹேம்நாத் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.