
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் நேற்று இரவு, , சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் ஆகிய இருவரும் தங்களது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், வீரபாண்டியைச் சேர்ந்த சந்திரனின் மகன் விக்னேஷ் (23), பாண்டியின் மகன் குணால் (25), உதயகுமாரின் மகன் ஹரிஹரன் (21) ஆகிய மூன்று இளைஞர்கள், மதுபோதையில் அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
பின்னர், அந்த பென்களின் ஆண் நண்பரை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்து, மற்ற இரு பெண்களையும் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது ஒரு பெண் துணிச்சலுடன் தப்பி ஓடி, அருகிலுள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மற்றொரு பெண்ணை பாதுகாப்பாக மீட்டதோடு, குற்றத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்.
தற்போது மூவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வீரபாண்டி மற்றும் சுற்றுவட்டார மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.