திருச்சியில் அதிகாலையிலேயே தள்ளுவண்டியில் மது விற்பனை – வைரலாகும் வீடியோ

Image showing a pushcart selling liquor early in the morning in Trichy, Tamil Nadu, with a video of the incident going viral on social media.


திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில், அதிகாலை நேரத்திலேயே தள்ளுவண்டியில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தடைச் சட்டத்திற்கிடையே, சமயபுரத்தில் அதிகாலை நேரமாக இருந்தும் குடிமக்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என பலரும் ஒரு தள்ளுவண்டியைச் சூழ்ந்து, அதிக விலையில் மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டு செல்கின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அதிர்ச்சி தெரிவித்து வரும் நிலையில், வருவாய் மற்றும் காவல் துறையினரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.