
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் காப்பீடு நிறுவன மேலாளர் சித்தார்த்தன் காந்தி பிரசாந்த் என்பவரது இல்லத்தில் நடந்த நகைதிருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த லதா என்ற பெண், வயதான தம்பதியர் மட்டுமே வீட்டில் இருப்பதை கவனித்து, அதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
வீட்டில் இருந்த 39 சவரன் நகைகளை, சிறு சிறு தொகைகளாக எடுத்து சென்று, அவற்றை விற்று வந்துள்ளதாக தெரியவந்தது. நகைகள் காணவில்லை என புகார் அளிக்கப்பட, விசாரணையில் சந்தேகத்தின் பேரில் லதாவை கைது செய்த போலீசார், கடுமையாக விசாரித்ததில் உண்மை வெளிச்சம் வந்தது.
தற்போது அவரது வசமிருந்து 16 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகள் விற்பனை செய்யப்பட்ட இடங்களை உறுதி செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.