மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார் தோனி!

மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார் தோனி!

நடப்பு  ஐபிஎல் தொடரில், இனி வரும் ஆட்டங்களில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கேவின்  கேப்டனாக பதவி வகித்த தோனி, 2023 ஆம் ஆண்டு வரை கேப்டனாக செயல்பட்டார். கடந்த 15 வருடங்களில், 12 முறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 235 போட்டிகளில் விளையாடி, அதில் 142 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஓர் அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் மற்றும் ஒரே அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தும் தோனி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றிலியே ‘கன்சிஸ்டெண்ட் டீம் ’ஆக சிஎஸ்கே வலம் வந்தது. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி விளையாடிய போது தான்.

இறுதியாக 2023 ஆம் ஆண்டு, சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்பட்ட தோனி 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்தார்.

தோனிக்கு முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் வரும் காலங்களில் அவர் கேப்டனாக செயல்படுவது சிரமம் என கூறப்பட்டது.

தோனிக்கு அடுத்த சிஎஸ்கேவின் கேப்டன் பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்ற போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்தனர்.

இதையெடுத்து 2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் கேப்டனாக ருத்துராஜ் செயல்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த சீசனில் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி சிஎஸ்கே அணி வெளியேறியது.

இதனை தொடர்ந்து தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் விளையாடி சிஎஸ்கே அணி, ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து,மிக மோசமான நிலையில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ருத்துராஜின் இடது முழங்காளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நடப்பு தொடரிலி இருந்தும் விலகியுள்ளார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ X  பக்கத்தில் ருத்துராஜ் காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகுகிறார்.எஞ்சிய போட்டிகளில் அவருக்கு பதிலாக 43 வயது இளம் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி கேப்டனாக அணியை வழி நடத்துவார் என அறிவித்தது.