
மருத்துவக் கல்விக்கான முதல் சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில்,49 வயதான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதவல்லி, தனது மகளுடன் கலந்தாய்வுக்கு வந்திருந்தார்.
ஆரம்பத்தில் மகளுக்காக தாயும் வந்திருக்கிறார் என நினைத்த அனைவரும், பிறகு அதிர்ச்சியடையும் வகையில் அமுதவல்லி தான் மருத்துவப் படிப்புக்காக கலந்தாய்வில் பங்கேற்றது அறிந்து ஆச்சரியத்தில் மூழ்கினர்.
நீட் தேர்வில் 147 மதிப்பெண் பெற்ற அமுதவல்லிக்கு, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து அமுதவல்லி பேசும் போது நான் ஒரு பிசியோதெரபிஸ்ட். “மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனது பழைய கனவு. 15 ஆண்டுகளுக்கு முன்பு அதை பின்தொடர முடியாத நிலையிலிருந்தேன். ஆனால் என் மகள் ‘நீட்க்காக படிக்கும்போது, நானும் படித்து, உடனே தேர்வையும் எழுதியேன். என் கனவு இப்போது நிறைவேறுகிறது. ஆனால் ஒரே கல்லூரியில் சேரக்கூடாது என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்,” என புன்னகையுடன் கூறினார்.
அவருடைய மகள் சம்யுக்தா கிருபாளினி, நீட் தேர்வில் 460 மதிப்பெண் பெற்றுள்ளார். பொது ஒதுக்கீட்டில் கலந்தாய்வில் பங்கேற்றுள்ள சம்யுக்தாவிற்கும் மருத்துவ இருக்கை கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது
தாய்–மகள் இருவரும் ஒரே ஆண்டில் மருத்துவக் கல்வியில் நுழைவது என்ற ஆச்சரியமான நிகழ்வும், உறுதியும், விடாமுயற்சியும் இருந்தால் வயதும், சூழ்நிலையும் கனவுக்கு தடையாக முடியாது என்பதையும் நிரூபிக்கிறது.