டாஸ்மாக்கில் ரூ1000 கோடி ஊழல் – குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை: பிண்ணனி என்ன !?

1000cr scam in tasmac

MRP விலையை விட அதிகமாக வசூலித்தது, போக்குவரத்து டெண்டர், பார் தொடர்பான டெண்டர்களில் முறைகேடு, டாஸ்மாக் ஊழியர்களின் இடமாற்றம் மற்றும் பணியமர்த்திலில் முறைகேடு, மேலும் பாட்டில் தயாரிக்கும்  நிறுவனங்கள் மூலம் போலியான கொள்முதல் நடந்திருப்பதாக  டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை குறித்து அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையினர் மார்ச் 6-ம் தேதி  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC)  பதிவு செய்த பல FIR-களின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் கீழ் பணமோசடி விசாரணையை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) தலைமை அலுவகம், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் Accord Distillers & Brewers Private Limited) என்ற மதுபான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தியது.  

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: “மும்மொழிக் கொள்கை திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம் ஆகியவற்றைத் திசை திருப்ப ஒன்றிய அரசு, டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்துகிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் டாஸ்மாக் துறையில் ரூ 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக ,சோதனை குறித்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது, பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

அமலாக்கத்துறையின் அறிக்கை

TASMAC அலுவலகங்களில் நடந்த சோதனை நடவடிக்கையின் போது முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:

  • போக்குவரத்து ஒப்பந்த கோரிக்கைகளில் மொத்தமாக ஒற்றை விண்ணப்பதாரர்களுக்கே ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டதற்கான ஆதாரம்.
  • விண்ணப்பதாரர்களின் KYC விவரங்கள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் (DD) விவரங்களில் முரண்பாடு இருந்தது.
  • TASMAC நிறுவனம் ஆண்டுக்கு ரூ 100 கோடிக்கும் மேல் போக்குவரத்து ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தியதுள்ளது.
  • GST/PAN எண்கள் மற்றும் சரியான KYC ஆவணங்கள் இல்லாத நபர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
  • சில மதுபான உற்பத்தி நிறுவனங்கள் TASMAC உயர் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்து அதிக உற்பத்தி ஆர்டர்கள் மற்றும் சலுகைகளை பெற்றுருக்கிறது.

மதுபான மற்றும் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள்:

  • மதுபான உற்பத்தியாளர் நிறுவனங்கள்: SNJ, Kals, Accord, SAIFL, Shiva Distillery
  • பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள்: Devi Bottles, Crystal Bottles, GLR Holding

இந்த நிறுவனங்கள் தவறான செலவுகளை காட்டி, போலி கொள்முதல் விவரங்களை உருவாக்கி, ₹1,000 கோடிக்கும் மேல் வருமானத்தை மறைத்துள்ளன. இந்த பணம் பின்னர் TASMAC ஊழியர்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சாட்சிகள் காட்டுகின்றன.

இந்த அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக,பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியது, மேலும் உடனடியாக பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கையை முன் வைத்து கண்டங்களை தெரிவித்து வருகிறது.இந்த  சூழலில் நேற்று (14/03/2025) செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் அமைச்சர் அமலாக்கத்துறையினர் குறிப்பிடுவது போல எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை, இது முற்றிலும் அரசின் மீது வீன் பழி சுமத்தும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனை, மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்,என்று தெரிவித்துள்ளார்.