
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே உள்ள கடலில் மீன்பிடித்த போது, அவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் இருந்த 5 மீனவர்கள் இலங்கை கடற்படையால் மன்னார் பகுதியில் பிடிபட்டனர். உடனடியாக அந்த படகையும் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் விடுதலைக்காக தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.