காதலி பேசவில்லை என காதலியின் வீட்டில் தகராறு செய்த இளைஞர்

"Young man creates disturbance at girlfriend's house after she stops speaking to him."


திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் குடியிருப்பில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், சமீபத்தில் தனது காதலரான ஆதம் என்பவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ஆதம், தனது நண்பர்களுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். காதலிக்கும்போது வாங்கித் தந்த பொருட்களும் செலவு செய்த பணமும் திருப்பிக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி, வீட்டில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது, அந்த தகராறை நிறுத்த முயன்ற சந்தோஷ்குமார் என்பவரை, ஆதம் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. குத்துப்பட்டதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை மூலம், ஆதமுடன் வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ஆதம் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.