சகோதரியை காதலித்த மாற்று சமூக இளைஞர் வெட்டிக்கொலை – எஸ்.ஐ.  மகன் கைது!

"Sub-Inspector’s son arrested for allegedly murdering a youth from another community who was in love with his sister."


நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு காவல் துறையில் உதவிக்காவல் ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்கள் சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேணி. இவர்களின் மகள், நெல்லை வேதா மருத்துவமனையில் சித்த மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் தாத்தாவை சிகிச்சைக்காக அழைத்து வந்த கவின்குமார் என்ற இளைஞரும், அவருடைய பள்ளி நண்பருமான வேதா என்ற மருத்துவரும், மீண்டும் பழகத் தொடங்கி காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், காதலர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இந்த உறவை கடுமையாக எதிர்த்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சைக்காக வந்த கவினை, பெண்ணின் சகோதரரான சுர்ஜித், “தனியாக பேசலாம்” எனக் கூறி டூவீலில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், தெருவில் எவரும் இல்லாத இடத்தில் அரிவாளால் சரமாரி வெட்டி படுகொலை செய்துவிட்டு, நேரடியாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

சுர்ஜித், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர். அவரது தந்தை ராஜபாளையம் பட்டாலியனில் மற்றும் தாய் மணிமுத்தாறு பட்டாலியனில் காவல் உதவியாய்வாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் கொலை, மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.