
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், மனநலக்கோளாரு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரது பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்வதால், தினமும் வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியே செல்வதாக சொல்லபடுகின்றது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளியான முருகேசன் என்ற நபர், அண்மையில் சிறுமியின் வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தெரிந்த பெற்றோர், உடனடியாக வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், முருகேசனை கைது செய்து, குழந்தை பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.