
விழுப்புரம் மாவட்டம் குறிஞ்சி நகரில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று, திங்கட்கிழமை இரவு வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட போது உணவுக்குள் நாட்டுவெடி மறைத்து வைக்கப்பட்டிருந்ததால், நாய் அதை கடித்த சில வினாடிகளில் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது.
வெடி வெடித்த நிலையில், நாயின் தலை பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டு, அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் சிலர், “நாங்கள் வளர்க்கும் ஆடுகளை அந்த நாய் அடிக்கடி கடிக்கிறது” என்று முன்பு புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, அந்த ஆட்டுக்காரர்களே நாடி வெடி வைத்திருக்கலாம் என நாய் உரிமையாளர் மற்றும் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“சம்பவத்தில் எந்தவொரு ஆதாரமும் தற்போது இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் நடவடிக்கை எடுக்க முடியாது. முழுமையான விசாரணைக்குப் பிறகு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என போலீசார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டக்கூடிய செயலில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பான உண்மை விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.