திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – மேற்குவங்க நபர் ரயில் நிலையத்தில் கைது!

"Instagram influencer Ilakiya attempts suicide, alleges abuse by stunt master."


திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடித்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியை நபரொருவர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து தேடப்பட்டு வந்த குற்றவாளி மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என தெரிய வந்தது. அதன்படி போலீசார் தனிப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடத்திய சோதனையில், சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையுடன் இருந்த அவரை பிடித்து கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.