
சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா, அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் இலக்கியா பிரபலமாக செயல்பட்டு வந்தார்.
இன்று உடற்பயிற்சிக்காக எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது இலக்கியா மதுபோதையில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன்பு இலக்கியா தனது இன்ஸ்டா பக்கத்தில் இட்ட பதிவில், ‘என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன் தான் காரணம். என்னை நம்ப வைத்து ஆறு வருடமாக ஏமாற்றிவிட்டார். பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை எதிர்த்தால் என்னை அடிக்கிறார். என்னால் சகிக்க முடியவில்லை’ என குற்றம்சாட்டியுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.