இளம்பெண்ணை ஆபாசமாக மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது!

"Auto driver arrested for obscene threats and harassment of a young woman."


சென்னை தேனாம்பேட்டை பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தேநீர் கடை அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்தியிருந்த ஒரு இளம்பெண், அதை எடுக்க முயன்றபோது சசிக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தை ஸ்கூட்டர் முன்பாக நிறுத்தியிருந்தார்.

அந்த வாகனத்தை நகர்த்துமாறு இளம்பெண் கேட்டபோது, சசிக்குமார் மது போதையில் ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக அந்த இளம்பெண் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தகவல் பெற்ற தேனாம்பேட்டை போலீசார் உடனே நடவடிக்கை மேற்கொண்டு சசிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.