
கர்ப்பிணி பெண்ணை நடு வீதியில் வைத்து அவரது கணவன் செங்கல்லால் மிருகத்தனமாக தாக்கும் காட்சிகள் பார்போரை பதபதைக்க வைத்துள்ளது
ஹைதராபாத்தில் கச்சிகூடா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெளியே இந்த பயங்கரத் தாக்குதல் சம்பவம் நடந்தேறியுள்ளது
ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான முகமது பஸ்ரத் என்பவர் இன்டீரியர் டிசைனராக பனிபுரிந்து வந்துள்ளார்
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 22 வயதுடைய ஷபானா பர்வீன் என்ற பென்னை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்
தற்போது அவரது மனைவி 2 மாத கர்பினியாக இருக்கும் நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வீட்டுக்கு செல்ல காத்துக்கொண்டிருந்த போது , மருத்துவமனை வளாகத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்
கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகறாறினால் கணவனே மனைவியை கொலைவெறியுடன் தாக்கயுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
கடந்த ஏப்ரல் மாதம் 1ம் திகதியன்று இரவு வைத்தியசாலைக்கு வெளியே நின்று கொண்டிருந்த மனைவியை அவரது கணவரான முகமது பஸ்ரத் காலால் உதைத்து கிழே தள்ளுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் , தற்போது வெளியாகியுள்ளன
மேலும் கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து தலையில் பலமுறை அடித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக நினைத்து அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு செல்வதை காணொளியில் காண முடிகின்றது
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் , படுகாயமடைந்த ஷபானாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
படுகாயமடைந்த நிலையில் தற்போது அவருக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக கூறப்படுகின்றது
இந்தக் கொடூர சம்பவத்திற்கு பிறகு தப்பியோடிய பஸ்ரதை போலீசார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி பலரும் அவர்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், அதிகாரிகள் இந்த வழக்கை மிகக் கவனத்துடன் விசாரித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு நீதியை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது