தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை – நகைக்காக கொன்ற இருவர் கைது

Elderly woman living alone murdered – Two arrested for killing her over jewelry


நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் 66 வயதான அகமது நாச்சியார் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். அந்த பகுதியில் வசித்து வந்த சாகுல் ஹமீது என்பவர் அவரது உறவினராக இருப்பதாக கூறப்படுகிறது.

அகமது நாச்சியார் அணிந்திருந்த 5 சவரன் நகையை இலக்காக வைத்து சாகுல் ஹமீது, தனது நண்பருடன் சேர்ந்து அந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் பெற்ற போலீசார் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.