
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் த.வெ.க. கட்சியில் பதவி தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி யாருக்கு கிடைக்க வேண்டும் என்ற விவகாரத்தில், சுமங்கலி ராஜா மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் இடையே கட்சி வாட்ஸ்ஆப் குழுக்களில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை சமாதானப்படுத்தும் நோக்கில் இரு தரப்பினரும் கோவில்பட்டியில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியதால், இரு தரப்பினரையும் சேர்ந்த ஆறு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இது தொடர்பாக தகவல் பெற்ற கோவில்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.