
தெரு நாய்கள் கழுத்தில் கடித்து குதறியதால் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவமொன்று பதிவாகியுள்ளது
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு சிறுவனின் உடலை வைத்துக்கொண்டு வைத்தியசாலையில் அவனது உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் கண்களை கலங்க செய்துள்ளது
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், ஸ்வர்ண பாரதி நகர் பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது
ஐசக் என்ற 4 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது , பல தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து அந்த சிறுவனை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கழுத்துப் பகுதியை நாய்கள் கடித்துக் குதறியதால், மயங்கி விழுந்த சிறுவனை மீட்ட அவனது பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்
சிறுவனின் குடும்பத்தினரும், பொதுமக்களும் வைத்தியசாலையில் கதறியழுது நடத்திய பாசபோராட்டம் பார்போர் மனதை கனக்கசெய்துள்ளது
கட்டுப்பாட்டின்றி தெருநாய்கள் திரிவதற்கு பொறுப்பு கூற வேண்டிய நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகக் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் சீரான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.