இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: நுங்கம்பாக்கத்தில் ஒருவர் கைது!

A man was arrested in Nungambakkam for sexually harassing a young woman in a public incident.

பணி முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வெங்கட்ராமன் என்ற நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தப்பிக்க முயன்ற அவரை பிடித்து ஆயிரம் விளக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வெங்கட்ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.