கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொண்று கணவனையும் கொல்ல முயன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

Woman sentenced to life imprisonment for murdering her two children and attempting to kill her husband over an illicit affair.

குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜய், தனியார் வங்கியில் பணிபுரிந்தவர். அவரது மனைவி அபிராமி டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாகி இருந்தவர் . இந்த நிலையில் அப்பகுதியில் பிரியாணி கடையில் வேலை பார்த்த சுந்தரத்துடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த கணவர் விஜய் பல முறை கண்டித்து வந்துள்ளார். இதையடுத்து தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், அபிராமி கடந்த 2018-ஆம் ஆண்டு கணவன் மற்றும் 6 வயது மகன் அஜய், 4 வயது மகள் கார்னிகா ஆகியோருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். இதில் விஜய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அபிராமி மற்றும் சுந்தரம் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கான வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரம் குற்றவாளிகள் என தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் ஆயுள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.