
திருச்சி மாவட்டம் காட்டூரை சேர்ந்த வீரமணி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி ஜீவாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயது மகனும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர். குடும்ப தகராறால் சக்தி ஜீவா தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி வீரமணி திடீரென மனைவியை அரிவாளால் துரத்தி துரத்தி வெட்டி, கழுத்து, இடுப்பு மற்றும் கைகளில் காயப்படுத்தினார்.
தீவிர காயங்களுடன் சக்தி ஜீவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான வீரமணி, திருச்சியில் ஒரு விடுதியில் மறைந்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.