
சென்னை பெரும்பாக்கம் அருகே பஸ் நிறுத்தத்தில் கடந்த 19ஆம் தேதி தலையில் கல்லால் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் அவர் பழனிசாமி என்று அடையாளம் காணப்பட்டார்.
பழனிசாமி, கணவரை இழந்த வீரலட்சுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிலிண்டர் டெலிவரி வேலை பார்த்த பழனிசாமி உறவுக்கார பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்ததால் அவர் பிரிந்து சென்றுள்ளார். இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் வீரலட்சுமிக்கு அசோக்குமார் என்ற நபருடன் கள்ளத் தொடர்பு உருவானது. இது குறித்து பழனிசாமி மனைவியிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்ததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. வீரலட்சுமி தனது கள்ளக் காதலனான அசோக்குமாரிடம் இதைக் கூறியுள்ளார். அதன்படி ‘உன் கணவனை வீட்டை விட்டு வெளியேற்று, நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அசோக்குமார் திட்டமிட்டார்.
இதன்படி வீட்டை விட்டு வெளியேறிய பழனிசாமி பெரும்பாக்கம் குடியிருப்பு அருகே தூங்கி இருந்தபோது, அசோக்குமார் கல்லால் அடித்து கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வீரலட்சுமி மற்றும் அசோக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.