
கடலூர் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில், தனது இருக்கைக்கு கீழே விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி வைத்து குண்டாக இருந்ததாக அவர் கடந்த கூட்டத்தில் தெரிவித்தார். இதையடுத்து, ராமதாஸ் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடினார். அந்த நிறுவனம் கருவியை சென்னைக்கு கொண்டு சென்று பரிசோதித்தது.
இதையடுத்து பாமக சார்பில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சைபர் குற்றப்பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளர் தினகரன் தலைமையிலான கிளியனூர் போலீசார் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்கள் கடந்த நான்கு நாட்களாக ராமதாஸ் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சென்னையில் ஆய்வு முடிந்த ஒட்டுக் கேட்கும் கருவியை தனியார் துப்பறியும் நிறுவனம் ராமதாஸிடம் திரும்ப ஒப்படைத்தது. பின்பு பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், அந்த கருவியை கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் இன்று ஒப்படைத்தார்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.