70 வயது மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது!

Image showing a police arrest in a case involving the murder of a 70-year-old woman and theft of her jewellery.

தருமபுரி மாவட்டம் ஆட்டியானூர் பகுதியைச் சேர்ந்த கம்சலா என்ற 70 வயது மூதாட்டியன் கணவரிடம் முத்து என்பவர் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.

அந்தக் கடன் தொகையான ரூ.50 ஆயிரத்தை அடைக்க கம்சலாவை கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்து விற்று பணம் பெற்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையை அறிந்த முத்து ஆந்திராவுக்கு தப்பி ஓடியதாகவும், அங்கிருந்து கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

முத்துவிடம் இருந்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.