“4 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லை” – தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

"No admissions in 4 government schools; headmasters receive official notice"

ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளியம்பாக்கம், கொளத்தூர், புது கேசாவரம், கிழவனம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் ஒரு மாணவரும் சேர்க்கப்படாத நிலை தொடர்கிறது. இதனை கண்டித்த வட்டார கல்வி அலுவலர்கள், காரணத்தை விளக்கி உடனடி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், உள்ளியம்பாக்கம், கார்ப்பந்தாங்கள், புளியமங்கலம் காலனி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நம்மனேரியில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளிகளில் தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், புதிய சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.