முட்டை கேட்ட மாணவனுக்கு துடைப்பத்தால் சரமாரி அடி!

முட்டை கேட்ட மாணவனுக்கு துடைப்பத்தால் சரமாரி அடி

பள்ளியில் முட்டை வைத்து கொண்டே ஏன் வழங்கவில்லை எனக் கேட்ட மாணவனை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலகா பரவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொல்லைமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு முட்டைகளை வைத்துக்கொண்டே, ஏன் முட்டை வழங்கவில்லை எனக் கேள்வி கேட்ட பள்ளி மாணவனை சத்துணவு சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள்   துடைப்பத்தால் சரமாரியாக அடித்த சம்பவத்தின் வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், அந்த பள்ளியின் ஆசிரியர்கள்,சமையலர் மற்றும் உதவியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

இதையெடுத்து சமையல் ஊழியர்கள் லட்சுமி மற்றும் முனியம்மாள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி முத்தழகன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறிய 2 ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, லட்சுமி மற்றும் முனியம்மாள் ஆகிய இருவர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ,கைது செய்தனர்.