காஞ்சிபுரத்தில் லாரி விபத்து: காவலாளி உயிரிழப்பு, 4 பேர் காயம்

A lorry accident in Kanchipuram results in the death of a security guard and leaves four others injured. Authorities are investigating the cause.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள பஜார் பகுதியில் நேற்று லாரி ஒன்று அதிவேகமாக தாறுமாறாக வந்து சாலையோரத்தில் நின்ற கார்கள், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் ஈஸ்வரன் என்ற காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் தீவிரமாக காயமடைந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை ஏரிக்கரையில் கவிழ்த்துவிட்டு தப்ப முயன்ற நிலையில் பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் விபத்தின் போது மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.