
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ராம்கோபால், வியாபார வேலைகளுக்காக சிந்தாதிரிப்பேட்டை வந்திருந்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் காப்பாற்றிள்ளனர்
இதைத்தொடர்ந்து ராம்கோபால் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது பையில் இருந்த சுமார் 1 கிலோ 200 கிராம் தங்கக் கட்டிகள் (மதிப்பு ரூ.1 கோடி) திருடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் தரப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு 2 ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர்.