பூட்டிய வீட்டில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு: பைக், மோதிரம், செல்போன் மாயம்!

"Dead body of woman found in locked house; bike, ring, and mobile phone missing"

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களாக பூட்டு போட்டுக் கிடந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதாக அண்டைவீட்டார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டில் குடல் வெளியே வந்த நிலையில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.

உயிரிழந்த அந்த பெண்ணின் இரு சக்கர வாகனம், அரைசவரன் தங்க மோதிரம் மற்றும் செல்போன் காணாமல் போயுள்ளதால், பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இந்த கொலை குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.