
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக இருந்த அஜித் குமார் (27) திருட்டு புகாரில் போலீசார் தாக்கியதால் கொடூரமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த 5 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த வழக்குத் தொடரில், அஜித் குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.