உண்டியலில் திருடிவிட்டு சிசிடிவி முன்பாக நடனமாடிய இளைஞர்கள்

"Youngsters steal from donation box and dance in front of CCTV camera."

சாத்தான்குளம் அருகே உள்ள வி.வி. பொறியியல் கல்லூரி பகுதியில் மாதா கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பக்தர்கள் உண்டியலில் நன்கொடை செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்ததால், நிர்வாகம் உண்டியலை இரும்பு கதவுக்கு உட்புறமாக வைத்து, புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வந்தது.

இந்நிலையில், ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் மூன்று பேர் கொண்ட கும்பல் கெபிக்கு வந்து, நீளமான குச்சியில் பபுள் கம் ஒட்டி, உண்டியலில் இருந்த பணத்தை சுலபமாக திருடியுள்ளனர்.

மேலம், சிசிடிவி கேமரா ரெக்கார்ட் செய்யும் போது திருடர்கள் கேமராவைப் பார்த்து சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் உற்சாகமாக நடனமாடி கொண்டு திருடியுள்ளனர்

காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தனர். புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய திருடர்களை அடையாளம் கண்டு பிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதா கோவில் உண்டியல் பணம் திருடிய இளைஞர்கள் கேமராவை நோக்கி நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.