27 ஆண்டுக்குப் பிறகு போர்ச்சுகலுக்கு செல்லும் இந்திய ஜனாதிபதி! 

27 ஆண்டுக்குப் பிறகு போர்ச்சுகலுக்கு செல்லும் இந்திய ஜனாதிபதி

27 ஆண்டுக்குப் பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் அரசமுறை பயனாக  போர்ச்சுகலுக்கு சென்றுள்ளார் 

அதாவது 1998-ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் தான் இறுதியாக  அரசமுறை பயணமாக   போர்ச்சுகலுக்கு சென்றிருந்தார் 

போர்ச்சுகல் அதிபரின் அழைப்பை ஏற்று  தற்போது  27 ஆண்டுக்குப்  பிறகு இந்திய ஜனாதிபதி  திரௌபதி முர்மு 4 நாள் அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கு பயணமாகியுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும்  10-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு, முதல்கட்டமாக இன்று போர்ச்சுகல் சென்றடைந்துள்ளார்.

போர்ச்சுகலில் உள்ள இந்திய தூதர் புனீத் ஆர் குண்டல் மற்றும் இந்தியாவில் உள்ள போர்ச்சுகல் தூதர் ஜோவா ரிபேரோ டி அல்மீடியா ஆகியோர்  பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதி   தனது 2 நாட்கள் பயணத்தை போர்ச்சுக்கலில்  முடித்து கொண்டு அடுத்தப்படியாக சுலோவாகியாவுக்கு செல்கிறார்.

அங்கு அவர் சுலோவாகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராசி ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த பயணங்களின்போது இந்தியா-போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா இடையே மூலோபாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடவுள்ளமையும் குறிப்பிடதக்கது .