
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மகனின் கடையை நடத்தி வந்த மருமகளை மாமனார் அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவத்தில் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலானூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் கடந்த ஆண்டு விஷம் குடித்து உயிரிழந்தார். அவரின் மனைவி அருணா (29) கணவன் நடத்திக் கொண்டிருந்த பழைய இருசக்கர வாகன கடையை மேலும் தொடர்ந்து நடத்தி வந்தார். கணவனின் மரணத்திற்கு பிறகு தாய்வீட்டில் குடியிருந்த அருணாவுக்கும், சக்திவேலின் பெற்றோருக்கும் இடையே மகன் இறந்த பிறகு விரோதம் இருந்து வந்ததுள்ளது.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 18) பிற்பகல் 3.30 மணியளவில் சக்திவேலின் தந்தை காமராஜ் (60 வயது) கடைக்குப் போய், மருமகள் அருணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் அதிகரித்த நிலையில், அரிவாளை எடுத்துக் கொண்டு அருணாவின் தலை, கை பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருணாவை மீட்டு முதலில் கடையம் அரசு மருத்துவமனைக்கு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றி வைத்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காமராஜ் எந்த காரணத்துக்காக மருமகள் மீது தாக்குதல் நடத்தினார்? சொத்து தகராறா? வேறு எந்த காரணமா? என்பது தொடரபில் போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்தோடு காமராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.