ரம்மி விளையாட்டில் பண இழப்பு – தாம்பரத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

"Youth from Tambaram attempts suicide after losing money in an online rummy game, exposing the dangers of gambling addiction."

தாம்பரம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் இருந்து மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்ற மின்சார ரயிலின் மீது குதித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து தீவிரமாக காயமடைந்தார்.

தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அவரை உடனடியாக மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 லட்சம் ரூபாய் இழந்ததால் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும், இதையடுத்து மனஉளைச்சலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.